அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்கள் மக்களுக்கு 30 கோடி தடுப்பூசிகள், சுமார் 150 நாட்களுக்குள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் ஜோபைடன் அரசால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி ஜூலை 4 ஆம் தேதிக்கு முன்பாக, 18 வயதுக்கு அதிகமான நபர்களில் 70% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜோபைடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் “அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள், சுமார் 30 கோடி கடந்த 150 நாட்களில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நான் பதவியேற்றது நெருக்கடியான சூழலில் தான். 150 தினங்களுக்கு முன்பாக நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை நினைத்து பாருங்கள். நம் மக்களுக்கு தேவையான தடுப்பூசி இல்லை.
ஆனால் நாம் அனைவரின் ஒற்றுமையான செயல்பட்டால் அந்த நிலை மாற்றப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “கொரோனா வைரஸிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அனைத்து மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் சுமார் 65% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.