Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரிப்பு… முழு விவரம்!

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 16 பேர், கேரளாவில் 20 பேர், உத்தரப் பிரதேசத்தில் 9 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியம், லடாக் யூனியன் பிரதேசத்தில் தலா 2 பேர், கர்நாடகாவில் 4 பேர், ராஜஸ்தானில் 3 பேர், தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஆவர்.

இவர்களது உறவினர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, பஞ்சாப், டெல்லி, உத்திரப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு பலர் ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் ஆவர்.

கர்நாடகா, கேரளா, பஞ்சாப், டெல்லி, உத்திரப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு பலர் ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 என 10 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |