ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பிரபல வைஷ்ணவிதேவி கோவிலில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. மேலும் வணிக வளாகம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபல வழிபாட்டு தலங்களும் கொரோனோவால் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில்,
பிரபல வைஷ்ணவி தேவி கோவிலில் பல இடங்களில் பக்தர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல வைஷ்ணவி தேவி கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர். கொரோனோ நோய் தொற்று காரணமாக கூட்டம் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கோவில்களுக்குச் செல்லும் மலைகளில் ஆங்காங்கே உள்ள குகைகளும் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.