வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுடிருந்த சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது…
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களாக உலகின் அனைத்து நாடுகளிலும் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பெரும்பாலான நாடுகளில். ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் உலக அளவில் இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடாக ஸ்லோவேனியா திகழ்கிறது.
இந்த நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கின்றது எனவும், இனி அசாதாரண சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அரசு தெரிவித்துள்ளது.ஸ்லோவேனியாவில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதுவரை அந்த நாடு முழுவதும் 1465 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் வெறும் 35 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இன்னும் நீடிப்பதால், மருத்துவ நிபுணர்கள் கருத்தின் அடிப்படையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் மே மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சோதனையை அதிக படுத்துதல், நோயாளிகளை தனிமைப்படுத்துதல், அவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசத்தை அணிந்து வெளியே செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அந்நாட்டு தேசிய பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான கட்டாயம் ஏழு நாள் தனிமைப்படுத்தலை ஸ்லோவேனியா குடியரசு நீக்கியுள்ளது. மேலும் வேறு நாட்டிலிருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.