முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்து வருகிறது.
ஆகையால் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 100 பேருக்கு மேல் ஒன்றாக கூடி நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்கள் கூடி இருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பட சூட்டிங் நடைபெற்று வந்தது. ஆகையால் அதனை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
ஆனால் அங்கு இருந்த பல பேர் முகக்கவசம் அணிய வில்லை. மேலும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்றுகொண்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து இருந்துள்ளனர். இதனால் கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினருக்கு மாநகராட்சி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.