Categories
தேசிய செய்திகள்

உயிர் மட்டும்மல்ல…. மனிதாபிமானமும் செத்து போச்சு….. ஆந்திரா அருகே சோகம்…!!

ஆந்திரா அருகே சாலையில் உயிரிழந்து கிடந்த சடலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்தது மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாராவ் என்பவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் கிருஷ்ணா ராவ். பிறகு உடல்நிலை மிகவும் மோசமானதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உங்களது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் அது வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

அதன்படி நீண்ட நேரமாக காத்திருந்தும், ஆம்புலன்ஸ் வராததால் வேதனையை அனுபவிக்க முடியாத அவர் தாமே நடந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவமனை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார். சிறிது தூரம் சென்ற அவர் நோய்தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக சாலையிலேயே சரிந்து மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மயங்கி விழுந்த அவருக்கு கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களும் அருகே சென்று உதவ முன்வரவில்லை. பிறகு இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்து கிடந்த அவரது உடலை நகராட்சி ஊழியர்கள் வந்து எடுத்துச் சென்று தகனம் செய்தனர். கொரோனா அவரது உயிரை மட்டும் கொல்லவில்லை. கூடவே சேர்த்து மனிதாபிமானத்தையும் கொன்றுள்ளது.

Categories

Tech |