சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது.
தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஓன்று மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
அதாவது அந்த வீடியோவில் ஒரே குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் குவியலாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுபோல் மருத்துவமனையில் சடலங்கள் கொத்துக்கொத்தாக உள்ளதை கண்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://youtu.be/-odKfz35o1I