செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டம். பல முறை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசினேன், அறிக்கை விட்டேன், எடுத்துக்கவில்லை. அம்மாவுடைய அரசு ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி தடை செய்தது. அந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நிறுவனத்தினர், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் தீர்ப்பை பெற்று விட்டார்கள்.
நீதியரசர் சொன்னார் மீண்டும் சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால், இதை தடை செய்யலாம் என்று சொன்னார். ஆனால் இந்த அரசாங்கம் மக்களிடம் கருத்து கேட்கிறது. ஒரு முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய மக்களுடைய கருத்தை கேட்கிறார். ரொம்ப வேடிக்கையா இருக்கு. சீட்டு விளையாடுவது கரெக்ட்டா ? தப்பா ? எனவா கேட்க முடியும்.
அதுவே சூதாட்டம். சூதாட்டம் என வருகின்ற போது இன்றைக்கு இளைஞர்கள் பாதிக்கிறார்கள், மாணவர்கள் பாதிப்படைகிறார்கள், ஒட்டுமொத தமிழகத்தில் இருக்கின்ற பெற்றோர்களும் பாதிப்படைகிறார்கள், சில பேர் பணத்தை இழந்து நிற்கிறார்கள், சில பேர் விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். ஆகவே தான் நாங்கள் வற்புறுத்தி சொல்லிக்கொண்டு இருந்தேன்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யுங்கள் என்று சொன்னால், இப்போது இருக்கின்ற தமிழக முதலமைச்சர் மக்களிடத்திலே கருத்து கேட்பதாக சொல்கிறார். இதையெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி இந்தக் காலத்தை நீட்டிப்பதற்கு தான் இந்த நாடகம். உண்மையிலேயே மனசாட்சி உள்ள ஒரு மனிதராக இருந்தால், உண்மையிலே நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட முதலமைச்சராக இருந்தால், உடனடியாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும்.
ஏனென்றால் எல்லா எதிர்க்கட்சியும் சொல்லுகிறது, அவர்களின் கூட்டணி கட்சியிலும் சொல்கிறார்கள், ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் காதில் போட்டுக் கொள்வதுமில்லை, நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற போது அதனுடைய கருத்தை சொல்வது சரியாக இருக்காது. வழக்கு முடிந்த பிறகு முழுமையான கருத்தை தொலைக்காட்சியின் வாயிலாக தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.