தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்கள்.
இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அடிக்கடி அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் 12.45 மணியளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து கவர்னரை சந்தித்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏ
ற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுனரிடம் கொடுத்துட நிலையில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமிகள் ஊழல் பட்டியலை கொடுக்க இருப்பது திமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் செயலால் அதிமுக தொண்டர்களுக்கு புது உத்வேகம கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.