கோஸ்ட்டா ரிகா நாட்டில் 3 டன் கொகைன் போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்ட்டா ரிகாவில் (Costa Rica) 3 டன் கொகைன் (Cocaine) போதை பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் கொலம்பியாவிலிருந்து படகு மூலம் கரீபியன் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல்கள் குறித்து 4 பேரிடம் கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.