Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காட்மேன் இயக்குனருக்கு 2-ஆவது சம்மன்… அதிரடி காட்டும் போலீசார் …!!

காட்மேன் வெப் சீரீஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர் 

காட்மேன் வெப் சீரிஸ் இயக்குனர் பாபு, யோகேஸ்வரன் அதேபோல தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்திருக்கிறார்கள். நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த சம்மன்னில் அவர்கள் நேற்று ஆஜராகவில்லை, அதேபோல அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது.எனவே அவர்களுக்கு இரண்டாவது சமன் இன்று வழங்கப்பட்டு இருக்கிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த சம்மன் கொடுத்திருக்கிறார்கள்.

வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இரண்டாவது  சம்மனுக்கு முறைப்படி ஆஜராக வில்லை என்றால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்து இருக்கின்றார்கள்.

முன்னதாக காட்மேன் வெப் சீரிஸ் தொடரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம் பெற்றிருந்த காரணத்தினால் இயக்குனர், தயாரிப்பாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 5 அமைப்புகள் அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தான் தற்போது சம்மன் அளிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |