பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 2600 பருத்தி மூட்டைகளை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு பவித்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், புதுசத்திரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் 2600 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இவ்வாறாக கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள் 55 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதில் கொட்டு ரக பருத்தி குவிண்டாலுக்கு 2,660 ரூபாய் முதல் 5,699 ரூபாய் வரையும், ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டாலுக்கு 6,300 ரூபாயிலிருந்து 7,489 ரூபாய் வரையும், டி.சி.எச் ரக பருத்தி 7,189 ரூபாய் முதல் 9,379 ரூபாய் வரைக்கும் ஏலம் போயின. அதாவது திண்டுக்கல், திருப்பூர், தேனி, சேலம், அவிநாசி கொங்கணாபுரம் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுத்து சென்றனர்.