Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி பயம் வேண்டாம்….. இதை குடிங்க….. இருமலை மறங்க….!!

இருமலை குணமாக்குவதற்கான சிறு மருத்துவ  குறிப்பு ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தற்போதைய சூழ்நிலைக்கு இருமல் வந்தாலே அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து நாலடி விலகி நிற்கிறார்கள். நாமும் நம் அருகில் இருப்பவர் இரும்பினால் சற்று பயத்தோடு விலகி நிற்போம். அப்படியான கால கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி இருக்க, நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகமிக நல்லது.

இருமலுக்கு சிறந்த தீர்வு சுக்கு பால் செய்து கொடுப்பதே. நன்றாக காய்ச்சிய பாலில் சுக்கு, மிளகு இரண்டையும் சம அளவில் தட்டிப் போட்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின்பு காய்ச்சி பருகுவதற்கு முன் லேசாக மஞ்சள்தூள் போட்டு கலக்கி குடிக்கவேண்டும்.இப்பாலை சுடச்சுட குடித்தால் தொண்டை இதமாகவும், தேகம்  புத்துணர்வோடும்  இருக்கும். அதோடு இருமலை குணப்படுத்துவதோடு  தொண்டையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் குணமாக்கும். 

 

Categories

Tech |