Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி இருமல் வருகிறதா….? பயம் வேண்டாம்…. மிகசிறந்த வீட்டு மருந்து….!!

சாதாரண இருமல், தொண்டை அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து தங்களையும் தங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல் வீட்டிற்கு பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் உண்மையைக் கூறி பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சாதாரண இருமல் வந்தால் கூட அது கொரோனா தான் என்று பலர் அச்சப்பட்டு மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவென்றால், சாதாரண இருமல் அல்லது தொண்டை அடைப்பு பிரச்சனை சில பாக்டீரியா தொற்றால் கூட வரலாம். பருவநிலை மாறும்போது தொண்டையில் பாக்டீரியா தொற்றும், கொரோனவைரஸ் அல்லாத பிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டு அது தேவையற்ற சளி, இருமல் தொண்டை வலி உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது தேவையற்ற பயம் கொள்ளாமல், சுடு பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும்.

மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமினில் என்ற வேதிப்பொருள் தொண்டை அலர்ஜியை குணப்படுத்தி, இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். அதேபோல் உப்பும் ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி தான். சுடு தண்ணீரில் கல் உப்பைப் போட்டு வாய் கொப்பளிப்பதால் தொண்டையில் உள்ள கிருமிகள் நீங்கி தொண்டை அலர்ஜி சரியாகும். இதேபோன்று நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களை உண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான மனநிலையுடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் கொரோனாவை எதிர்த்து போராடுவோம்.

Categories

Tech |