தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சமந்தா வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் நிலையில் தென்கொரியாவுக்கு முயற்சி செய்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய உடல் நலம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, நான் எத்தனையோ போராட்டங்களில் இருந்து ஜெயித்து மீண்டும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உடல்நல பிரச்சனையில் இருந்தும் மீள்வேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். சில சமயங்களில் என்னால் நடக்கவே முடியாது என்று பயந்து அஞ்சிய நாட்களும் இருக்கிறது.
தினமும் நிறைய பேருக்கு எத்தனையோ சவால்களுடன் போராட வேண்டி இருப்பது போன்ற நானும் உடல்நல பிரச்சனையால் போராடுகிறேன். நான் ஒரு முறை ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அதை செய்தே தருவேன். ஒரு படத்தில் உயிரைக் கொடுத்து நடிக்கும் போது அதில் சொந்த குரல் கேட்டால் தான் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் அதனால் தான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது டப்பிங் பேசினேன் என்று கூறியுள்ளார்.