Categories
கல்வி

“ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு மையங்கள்” வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 2849 முது நிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை‌-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய இடங்களை நிரப்புவதற்கு பணி நாடுனர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கலந்தாய்வுக்கு பிறகு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதனையடுத்து தமிழ் பாடத்திற்கான கலந்தாய்வு கூட்டம் எழும்பூரில் உள்ள பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ஆங்கில படத்திற்கான கலந்தாய்வு கூட்டம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம், முதல் தளம் மற்றும் டிஜிபி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து வணிகவியல் பாடத்திற்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள எம்சிசி மேல்நிலைப் பள்ளியிலும், பொருளியல் பாடத்திற்கு அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், கணித மொழிக்கு லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியிலும், இயற்பியல் பாடத்திற்கு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திலும் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு நாடுநர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதம் மற்றும் அனைத்து விதமான கல்வி நகலுடன் காலை 9 மணிக்கு மையத்தில் இருக்க வேண்டும்.

Categories

Tech |