தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் 21 முதல் 27-ஆம் தேதி வரை இணையதளத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.