ராஜஸ்தானில் கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி 12ஆம் வகுப்பு படிக்கும் இளைஞனை பெண் வேடமிட்டு ரோட்டில் அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயது சிறுவன் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். அவர் வீட்டின் அருகில் திருமணமான பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். அந்தப் பெண் சிறுவனிடம் பாசமாக பேசி பழக ஆரம்பித்துள்ளார். அந்த சிறுவனுக்கும் ஊரடங்கில் பொழுது போகாமல் இருந்ததற்காக அப்பெண்ணுடன் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். இது காலப்போக்கில் கள்ள தொடர்பாக மாறிவிட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே தெரியவந்ததும், அந்த வாலிபரை அழைத்து இது தவறு, இதுபோல் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். பின்னர் அந்த இளைஞன் அந்தப் பெண்ணிடம் பேசாமல் சிறிது நாட்கள் இருந்து வந்துள்ளார். ஆனால் அப்பெண் தொடர்ந்து அந்த இளைஞனை தொல்லைப்படுத்தி வந்துள்ளார்.
பின்னர் அந்த ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து இதுபோன்று சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதற்காக அந்த வாலிபருக்கு நூதனமான ஒரு தண்டனை வழங்கியுள்ளனர். அது என்னவென்றால் அந்த வாலிபருக்கு பொட்டு வைத்து, பூ வைத்து. பெண்கள் அணியும் வளையல், கொலுசு, ஆடைகள் அனைத்தையும் வழங்கி அவரை பெண் போல் மாற்றி, கைகால்களில் சங்கிலி போட்டு ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட காவல் துறையினர் விரைந்து வந்து அந்த இளைஞனை மீட்டனர் .பின்னர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என கிராம மக்களுக்கு அறிவுரை கூறினார்.