ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களுக்கு ஆன செலவு தொகை வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் ஐந்து மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. எனினும், தங்களுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குமாறு உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் நேட்டோ நாடுகளிடம் நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ரஷ்யாவை வெல்ல தகுந்த ஆயுதங்களை எங்களுக்கு தராவிட்டால் நேட்டோ நாடுகள் வருங்காலத்தில் ரஷ்ய போரை சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருக்கிறார். 30க்கும் அதிகமான நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்திருக்கிறது. தற்போது வரை, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிய பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
பிரிட்டன் மற்றும் போலந்து நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. மேலும் கனடா, ஜெர்மனி, கிரேக்கம், ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு உதவி இருக்கின்றன.
அமெரிக்கா தற்போது வரை 6.3 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆயுத உதவிகள் வழங்கியிருக்கிறது. பிரிட்டன் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது. மேலும் பிரிட்டன் அரசு 1.2 பில்லியன் தொகை உக்ரைனுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறது.