Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அள்ளும் சுவையில் நாட்டு கோழி குருமா செய்து பாருங்க …

நாட்டு கோழி குருமா
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி –  1/2  கிலோ
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் – 1/2  ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1  1/2  டீஸ்பூன்
தனியா தூள் –   1/2  ஸ்பூன்
தேங்காய் –  1/4  மூடி
கசகசா – 1/2  ஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நாட்டு கோழி குருமாக்கான பட முடிவுகள்
செய்முறை :
முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ள  வேண்டும். பின் தேங்காய், கசகசா, முந்திரியை  அரைத்து கொள்ள  வேண்டும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது ,  தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர்  மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி , மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுது , உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில்  விட்டு  வேகவைத்து எடுத்தால்  சூப்பரான நாட்டு கோழி குருமா தயார்!!!

Categories

Tech |