சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ய உள்ளூர், வெளிநாடுகளில் ஏற்றுமதி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
இதை நம்பியை சுற்றுவட்டார மக்கள், வியாபாரிகள் கோடிக்கணக்கில் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.ஆனால் மணிவண்ணன் வாக்குறுதி அளித்தப்படி எந்த உரிமையும் பெற்றுத் தராதால் விரக்தியடைந்த சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்தாண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல் துறையினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனர். அதில் மணிவண்ணன் பல கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவருக்கு உடந்தையாக சகோதரர்களான ராம், லட்சுமணன், மாமனார், மாமியார் சரஸ்வதி ஆகியோர் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை நேற்று கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், 2 டேப்லேட், 13செல்போன்கள், 2 சொகுசு கார், 10 பவுன் தங்கச்செயின், 2 தங்க வளையல்கள் , 50ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர் விசாரணையில், மணிவண்ணனால் இதுவரை 350பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதேபோல் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதும், இந்த மோசடி பணத்தை வைத்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்ற மணிவண்ணன் பல பெண்களுடன் உல்லாசம் அனுவபவித்ததும் தெரியவந்துளளது.