Categories
உலக செய்திகள்

கனடா தப்ப முயன்ற தம்பதி… அதிரடி நடவடிக்கையால் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நியூஜெர்சி என்ற பகுதியில் வசித்து வந்த தம்பதியர் கனடாவுக்கு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் கைது செய்துள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணவர் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அவர் தனது 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 12 வயதாகும் அந்த சிறுமியும் தற்போது அதை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே தம்பதி இருவர் மீதும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |