Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரா… அதிர்ச்சியில் மனைவிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பாண்டுரங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் எதிர்பாராவிதமாக இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பாண்டுரங்கனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாண்டுரங்கர் பரிதாபமாக உயிரிழந்டுவிட்டார். இதனை அடுத்து கணவன் இறந்த தகவலை கேட்ட அவரது மனைவி சாந்தா அதிர்ச்சியில் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |