நேபாளத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
நேபாளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் சண்டை போட்ட வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் மணமேடையில் திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் இருவரும் உணவு பரிமாறிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது.
https://www.instagram.com/p/Cfpp8eQqlzy/
அப்போது திடீரென்று, மணமகளும், மணமகனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி தள்ளுகின்றனர். இருவரும் உருண்டு, சண்டையிடுகிறார்கள். இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் இந்த வீடியோவிற்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கிறார்கள்.