Categories
உலக செய்திகள்

“அடடே!”…. போருக்கு மத்தியில்… இப்படி ஒரு திருமணமா….? வைரலாகும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கு குழியில் வைத்து ஒரு திருமணம் நடந்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன், தங்களை காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த பயங்கர மோதலில், இரு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உக்ரைனில், மணமகன் ராணுவ உடை அணிந்த நிலையில், பதுங்கு குழியில் வைத்து ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்திருக்கிறது. இத்திருமணம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் பரவி வருகின்றன.

Categories

Tech |