நகை வாங்குவது போல் நடித்து 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை தம்பதியினர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எஸ்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த தம்பதியினர் ரவியிடம் வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து யாரும் பார்க்காத சமயத்தில் அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை வெள்ளி டம்ளரை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.
ஆனால் அவர்கள் திருடியதை பார்த்த ரவி இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தம்பதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் மற்றும் செல்வி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்து விட்டனர்.