தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அறிவழகி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் இந்த தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதிகளை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளான மணிகண்டன், சந்தோஷ், சத்யா ஸ்ரீ, ராம கிருஷ்ணன், யுவராஜ் என்ற 5 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் குற்றவாளியான சந்தோஷ் நன்கு அறிமுகமான பெரியசாமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பெரியசாமியின் வீட்டில் பணம் மற்றும் நகைகள் அதிகமாக இருப்பதை நோட்டமிட்ட சந்தோஷ் தனது நண்பர்களுடன் இணைந்து தம்பதிகளை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.