Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” தம்பதிக்கு கொடுத்த தண்டனை….. காணொளியால் வெகுண்டெழுந்த பிரபலங்கள்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை மொட்டை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை செருப்பு மாலை அணிவித்து, பாதி மொட்டை அடித்து சித்ரவதை செய்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவன் மனைவி இருவரையும் சாலையில் முட்டி போட வைத்து அரங்கேற்றிய கொடூர சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். காணொளியில் தம்பதிகளுக்கு செய்யும் சித்திரவதையை மக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும் பதிவாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த சாந்தனு, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |