Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தெறித்து ஓடிய ஜோடி ….! ”தோப்புக்கு பாய்ந்த ட்ரோன்” தனிமையில் காதலர்கள் ….!!

ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை  ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணித்தபோது காட்டுப்பகுதியில் காதலர்கள் சிக்கியுள்ளனர்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்ததால் சமூக விலகலை அனைவரும் பின்பற்றுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வருமாறு மாநில அரசுகள் அறிவித்து, மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்திலும் அதேபோன்ற நிலைதான். ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் பல பகுதிகளில் ஊரடங்கை மீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் வந்து கொண்டு இருந்த நிலையில் தான் அத்தனையும் கட்டுப்படுத்த காவல்துறை ஆயுதமாக கையில் எடுத்தது ட்ரோன். இதன் மூலம் மூலை முடுக்கெங்கும் என்ன நிலை என்று காவல்துறை கண்டறிந்து வருகின்றனர்.

சில நேரங்களில் காட்டுப்பகுதியில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட், கேம் விளையாடியவர்களையும் ட்ரோனை வைத்து  தலைதெறிக்க ஓட வைத்த காவல்துறையினர் தற்போது காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்த காதலர்களையும் ஓட ஓட விரட்டியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஏரிக்கரையை அம்மாவட்டக் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.

அப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோனை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியை கொண்டு முகத்தை மூடியும் தலைதெறிக்க ஓடினர். இருந்தும் விடாத ட்ரோன் அப்படியே தைலம் காட்டுக்குள் ஒரு ரவுண்டு  அடித்தது. அப்போது காதல் ஜோடி தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த ட்ரோன் கேஷூவலாக ஜோடிக்கு அருகே சென்றது. இதனால் நடுங்கி போன காதலர்கள் தாங்களின் இருசக்கர வாகனத்தில் ஏறி  பாய்ந்த போதும்  அவர்களை விடாமல் விரட்டி விரட்டி ட்ரோன் கதறவிட்டது. இந்தக் காட்சிகளை அந்த மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |