Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நமக்கு பிறகு யாரு பார்த்துப்பா…? தம்பதியினரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கடன் தொல்லை அதிகமானதால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மந்தைவெளி பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் சாம் என்ற ஒரு நாயை குழந்தை போல செல்லமாக வளர்த்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்த லோகநாதன் தனக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து மாதாந்திர ஏலச்சீட்டு முடிவடைந்த நிலையில் அந்த பணத்தையும் லோகநாதனால் திரும்ப கொடுக்க இயலவில்லை.

இதனை தொடர்ந்து கடன் சுமை அதிகமானதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன் பின் குழந்தை போல வளர்த்த நாயின் நிலைமை தாங்கள் இறந்த பிறகு என்ன ஆகுமோ என்று மன உளைச்சலில் இருந்த தம்பதிகள் நாயின் தலையில் பிளாஸ்டிக் பையை கொண்டு மூச்சுவிட முடியாத அளவிற்கு இருக்கமாக கட்டி விட்டனர். அதன்பின் தம்பதியினர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அந்த நாய் பிளாஸ்டிக் பையை கிழித்து தப்பித்து விட்டது. இதற்கிடையில் லோகநாதன் தனது நண்பரான தனபாலன் என்பவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தங்களது வீட்டை விற்று வரும் பணத்தில் கடன் கொடுத்தவர்களின் பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் எனவும், எங்கள் இருவரின் உடல்களையும் ஒரே குழியில் புதைத்து விடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் காவல்துறையினருடன் அங்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |