திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம்.
இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே தம்பதியரே இரவில் அங்கு உறங்குங்கள்.