ஹன்சிகாவின் மகா படத்தின் தயாரிப்பாளர் மீது இப்படத்தின் இயக்குனர் புகார் அளித்துள்ளார்.
யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் முன்னணி நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரின் யூ.ஆர்.ஜமீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தெரு தொடர்ந்துள்ளார். அதில், எனக்குத் தெரியாமல் இப்படத்தை முடித்துவிட்டு தற்போது ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. மேலும் இப்படத்தில் தனக்கு 24 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது வரை 8 லட்சத்து 15 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளது.
ஆகையால் எஞ்சியுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இப்படத்தினை ஓடிடியில் வெளியிட கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் கூறியதாவது, வரும் மே 19ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக தயாரிப்பாளர் உட்பட சம்மந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.