Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு போய் சேரல…. விலை நிர்ணயம் பண்ணுங்க…. தமிழ்நாடு பரவாயில்லை கூறிய நீதிபதி….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் பயன் பெற முடியாத நிலை உள்ளது. ஏன்னென்றால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் தடுப்பூசி பெரும்பாலான பொதுமக்களுக்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசி விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆனந்தி, சிவஞானம் நீதிபதிகள் கூறியதாவது “பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரவாயில்லை. நமது அரசும் தொடர்ந்து முயற்சி எடுத்துதான் வருகின்றது” என்று கூறியுள்ளனர். பின்னர் இந்த வழக்கை ஜூன் மாதம் முதல் வாரம் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |