நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன், ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் போல செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , நீட் தேர்வை நீக்கவேண்டும் என்றார். அத்துடன், திமுக தமிழகத்தில் ஆட்சியை களைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் .
உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகிறது . ஆனால் ஊழல் மிகுந்த இந்தியாவும், நைஜீரியாவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதாக குறைகூறியதுடன் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என்றும் கூறினார் .