சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக வேண்டும்.
தவறுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.வாட்ஸ் அப் அந்தந்த நாட்டின் சட்டங்களை பின்பற்றும் போது இந்திய சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் பேஸ்புக் , ட்வீட்_டர் வழங்கும் ஒத்துழைப்பை வாட்ஸ்அப் வழங்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.