Categories
தேசிய செய்திகள்

வேலை தேடி சென்ற சிறுமி… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி வேலை தேடி தனது உறவினரான அஜித்தா என்பவரை சென்று சந்தித்துள்ளார். அவர் கொல்லம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் ஷாஜகான் அந்த சிறுமியை ஏமாற்றி வேலை வாங்கி தருவதாக கூறி அவரது வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதனையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த சிறுமி ஒரு வாலிபருடன் இருந்த போது, அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

அப்போது நடந்த அனைத்தையும் அந்த சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவான சுரேஷ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு அவர் மீண்டும் தப்பி ஓடிவிட்டார். இவரை ஹைதராபாத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளா தனிப்படை போலீசார் கைது செய்து விட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோட்டையம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக சுரேஷ் என்ற ஷாஜகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. அதோடு அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |