Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு… தனியாக தவித்த குடும்பத்தினர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் சுஜித் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் தாஸ் தனது காரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

இதனால் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் சுஜித்தின் குடும்பத்தினர் சார்பில் 2 1/2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சரோஜினி தேவி விபத்து நடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 25 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |