Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… மனைவி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் மகாதேவன் என்ற இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் மகாதேவனின் மனைவி செல்வி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனது கணவரின் இறப்புக்குப் 60 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சரோஜினி தேவி 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |