Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு வலிக்குது” நடன பயிற்சியாளர் செய்த செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நடன பயிற்சியாளருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் நடன பயிற்சியாளரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி சரவணகுமாரிடம் நடனம் கற்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிறுமி நடன பயிற்சியாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தனக்கு உடல் வலிப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரவணகுமாருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |