Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் இல்லாமல் ஏன் வந்தீர்கள்….? தொழிலாளி கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தொழிலாளியை குத்தி கொலை செய்த வழக்கில் நீதிபதி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவும், அவருடைய நண்பரான நெல்சன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் காலனியில் நின்று கொண்டிருந்த போது மணி என்பவரின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் அங்கு சென்றுள்ளது. இந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மற்றும் நெல்சனிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்ட போது, நண்பர்கள் இருவரும் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். அப்போது பணம் இல்லாமல் ஏன் வந்தீர்கள் என்று கூறி மணி அவர்களை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிப்பேன் என பாபு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மணியும், அந்த கும்பலை சேர்ந்தவர்களும் பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளியான மணி, ஆனந்தராஜ், சசிமோகன், நவீன்குமார், மோகன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |