Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பெண்களிடம் நகை பறித்த குற்றத்திற்காக வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் நாச்சியார் பாளையத்தில் காமராஜர் கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு காயத்ரி மற்றும் தூய மலர் மார்ட்டினா ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த கல்வி கூடத்திற்குள் புகுந்த லியோன் என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தூய மலர்  மற்றும் காயத்ரி அணிந்திருந்த மொத்தம் 5  பவுன் தங்க நகைகளை பறித்து விட்டார்.

அதன் பிறகு லியோன் இருவரையும் குளியல் அறையில் தள்ளி பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லியோனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம் லியோனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |