Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவியை கொன்ற தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கேத்து நாயக்கன் பட்டியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு காமாட்சியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த ரவி தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரவிக்கு 1௦௦0 ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |