சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியான 2 வாலிபர்களுக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென இந்த சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சேகர் மற்றும் முருகன் என்பவர்கள் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததோடு, சிறுமியை மீட்டனர். இந்த வழக்கானது கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்றொரு குற்றவாளியான முருகனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.