Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண் இரும்புகம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்துவிட்டு முத்துலட்சுமியின் உடலை ரேவதி போர்வையால் சுற்றி கட்டிலுக்கு அடியில் மறைத்து விட்டார். அதன்பிறகு முத்துலட்சுமியின் உடலை ரேவதி சாக்கடைக்கு அருகில் வீசியுள்ளார்.

இதற்கிடையில் முத்துலட்சுமியை தேடிய உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேவதியும், அவரது மகனும் இணைந்து முத்துலட்சுமியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளியான ரேவதிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார். மேலும் ரேவதியின் மகன் மீதான வழக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |