Categories
இந்திய சினிமா சினிமா

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான உத்தரவை மும்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா படப்பிடிப்புகளை துவங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

எனவே கடும் நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிப்பது, குறைவான எண்ணிக்கையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் 65 வயதிற்கு மேலானவர்கள் வரக்கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசின் அறிவிப்பை எதிர்த்து ஜூலை 21ஆம் தேதி நடிகர் ப்ரமோத் பாண்டே மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள்,” மற்ற தொழில்களை எல்லா வயதினரும் செய்ய அனுமதிக்கப்படும் போது நடிப்பதற்கு மட்டும் வயதானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது சரியல்ல” என கூறினர்.

அரசின் முடிவு இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களை கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது.

Categories

Tech |