நடிகர் விஷால் நேரில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் உத்தரவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியருக்கு வழங்கிய சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை வருமானவரிக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என்று எழுந்து புகாரை அடுத்து அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்க்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் அவருக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அவர் ஆகஸ்ட் 2_ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விஷால்லுக்கு உத்தரவிட்டபட்டுருந்த நிலையில் இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு , வழக்கை வருகின்ற 28_ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.