Categories
மாநில செய்திகள்

உ.பியில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு! 

உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

இதுபோல் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களையும், முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. 

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை முன்பும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது ‘போராட்டக்காரர்களின் புகைப்படத்தை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்’ என தனது கண்டனங்களை தெரிவித்தது. 

எனினும் ‘பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்கள் தான் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுதல் முறையல்ல. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ளது’ என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். 

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் இதே காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் போது குறிப்பாக இவர்களை மட்டும் புகைப்படம், முகவரி வெளியிட்டு பொது இடங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதற்கான நியாயப்பாடுகளை அரசு வழங்க முடியாது. மேலும் இது தொடர்பாக தலைமை வழக்கறிஞர் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறிவிட்டார் என்று கூறி பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Categories

Tech |