பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இதையடுத்து ஜெய்கோபால் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று கைது செய்யப்பட்ட ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் மனுதாக்கல் செய்தனர்.இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று இதற்கான மறுவிசாரணையை அக்.24_ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டுள்ளது.