ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நாளை நடைபெறுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எங்களின் தரப்பு வாதங்களை வைக்க 4 மணி நேரம் வேண்டுமென்று சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து அதுவரை ப.சிதம்பரதத்தை கைது செய்யும் தடை உத்தரவை நீட்டித்து உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையயடுத்து அனைத்து தரப்பு , வாதங்களையும் முன்வைத்து வழக்கின் உத்தரவு நாளை பிறப்பிக்கப்படுமென்றும் தெரிகின்றது.