தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியதை அடுத்து தான் வலியுறுத்தி வந்ததை உயர்நீதிமன்றம் கூறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்க படுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது குறித்து தமிழக அரசு முறையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் மரணம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து இவை அனைத்தும் தான் வலியுறுத்தி வந்தவை என்பதில் மகிழ்ச்சி என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.